நாகம்மாள் : ஆர். ஷண்முகசுந்தரம்

நாகம்மாள் – ஆர் : ஷண்முகசுந்தரம்

“குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நவீனம் இதுதான்” என்கிறார் கு.ப.ரா. ஆர், ஷண்முகசுந்தரத்தின் முதல் நாவலும் இதுதான்.

நாகம்மாள் ஒரு இலட்சியக் கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறாள். சுய பிரக்ஞையுடன் முடிவெடுக்கும் ஒரு புருசியின் கதைதான் நாகம்மாள். தனக்கென்ற உடைமைகளின் மீதான உரிமைக்கான குரலாக நாகம்மாள் தொனிக்கவிடப்படுகிறாள். கதைக் கட்டமைப்பும்சரி, கதாபாத்திரங்களும்சரி இயல்பான நிலையில் நகர்கின்றன. நாகம்மாள் ஆசிரியரால் வலிந்து உருவாக்கப்பட்ட பாத்திரமாக இல்லை. அவள் இயல்பாக வாசகனுடன் ஊடாடுகிறாள். நம் கண் முன்னே உயிர்ப்புடன் திரிகிறாள். பக்கத்து வீட்டு சரசன்ரியின் கதையைக் கூறுவதுபோல நாகம்மாளின் கதையைக் கூறமுடியும். அவ்வளவிற்கு நெருக்கமான, ரசிக்கக்கூடிய கதாபாத்திரமாக நாகம்மாள் இயங்குகிறாள்.

Continue reading “நாகம்மாள் : ஆர். ஷண்முகசுந்தரம்”

சொற்கள் : ழாக் ப்ரெவர்(Jacques Prevert)

ழாக் ப்ரெவெர் : சொற்கள்

“ழாக் ப்ரெவர்” கவிதைகளால் உலகை ஆண்ட மேதை. இவரது முதற் கவிதைத் தொகுப்பாக அறியப்படுவது “சொற்கள்.”

“சொற்கள்” இரண்டாம் உலகப்போர் காலத்தில் வெளிவந்தது. 1946, மே,10இல் “விடியல்” பதிப்பகத்தின் சொந்தக்காரரும் ழாக் ப்ரெவரின் நண்பருமான “ரெனெ பெர்தெலெ” என்பவரால் நூல்வடிவம் பெற்றது. முதல் பதிப்பில் 5000 பிரதிகள் அச்சிடப்பட்டன. 5000 பிரதிகளும் ஒரு வாரத்தில் விற்றுத் தீர்ந்தன. பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் விற்பனையில் பெரும் சாதனை படைத்திருக்கிறது சொற்கள். இன்றுவரை 30 லட்சம் பிரதிகளுக்கு மேல் இந்நூல் விற்பனையாகியிருக்கிறது.

Continue reading “சொற்கள் : ழாக் ப்ரெவர்(Jacques Prevert)”

பரதகண்ட புராதனம் : டாக்டர் கால்டுவெல்

பரதகண்ட புராதனம் : டாக்டர் கால்டுவெல்

கீழைத்தேச நாடுகளில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ குருமார்களில் டாக்டர் கால்டுவெல் மிக முக்கியமான ஆய்வாளர். “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற அரிய ஆய்வு நூலின் மூலம் தமிழின் தனித்தன்மையை நிறுவியவர்.

மதம்பரப்பும் நோக்கில் வருகைதந்த மதகுருக்கள் கீழைத்தேச நாடுகளில் உள்ள சமயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாக இருந்தது.

கால்டுவெல் இந்தியாவின் சமயம் பற்றி தெரிந்துகொள்ள மேற்கொண்டமுயற்சிகள் வேதம், இதிகாசம், புராணம், என்பனவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள வழி வகுத்தன.

Continue reading “பரதகண்ட புராதனம் : டாக்டர் கால்டுவெல்”

பித்தப்பூ : க.நா.சு

பித்தப்பூ : க.நா.சு

க.நா.சு அழகியலாளர் வரிசையில் முதன்மையான மிக முக்கியமான ஒருவர். டி.கே.சி க்கு அடுத்தபடியாக ரசனையில் தனக்கென ஒரு இலக்கியக் குழுவை உண்டாக்கியவர்.

க.நா.சு வின் இறுதி நாவல் பித்தப்பூ.

Continue reading “பித்தப்பூ : க.நா.சு”

போரும் காதலும் : லியோ டால்ஸ்டாய்

போரும் காதலும் : லியோ டால்ஸ்டாய்

வாழ்வின் கணங்கள் ஒவ்வொன்றுமே அன்பும், போராட்டமும் நிறைந்தவைதான். வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டது அதே வேளை சபிக்கப்பட்டதும் கூட. நம்மை சூழவுள்ள மனிதர்களே எப்போதும் நம்மை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றார்கள். என்னதான் நாங்கள் முரண்டுபிடித்து வாதிட்டாலும். எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் எப்போதுமே தீர்மானிப்பதில்லை. “நீர் வழிப்படும் புணை போல் ஆருயிர் முறை வழிப்படும்” என்பதுதானே இந்த வாழ்க்கையின் யதார்த்தம்.

Continue reading “போரும் காதலும் : லியோ டால்ஸ்டாய்”

Design a site like this with WordPress.com
Get started